Verse 7057 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkudandhaikkeezhkkottam Thirutthaandagam · Verse 3 of 11
திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் – திருத்தாண்டகம் · 6.75.3
நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும் நிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கைஆறலைத்த சடைமுடியும் அம்பொற் றோளும் அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும் ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலுங்கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.