Verse 7055 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkudandhaikkeezhkkottam Thirutthaandagam · Verse 1 of 11

திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் – திருத்தாண்டகம் · 6.75.1

சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச் சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங்கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங் கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்மன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும் மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
Share