Verse 7056 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkudandhaikkeezhkkottam Thirutthaandagam · Verse 2 of 11

திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் – திருத்தாண்டகம் · 6.75.2

கானலிளங் கலிமறவ னாகிப் பார்த்தன் கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்ஆனவிளங் கடுவிடையொன் றேறி அண்டத் தப்பாலும் பலிதிரியும் அழகர் போலுந்தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற் செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்கூனலிளம் பிறைதடவு கொடிகொள் மாடக் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
Share