verse 37 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal
கதிர்காமக் கலம்பகம் 37
தேனவிர் பகற்கஞ்ச முகமாறு கொண்டமை தெரிக்கிலொருகுடிலை யுடனே செய்யவைஞ் சத்தியா னென்பதற் கேமற்ற சீரங்கமுண்மை யகலாத், திருவருட் குணனியா னென்பதற் கேசிவ னுதற்கணிற் பொறியி லெழுதல்,ஊனவிரி யோனியுற் பவமிலாப் பதியாகி யகராதி யுறுபொ றிகளா,யுளபொரு ளியானென்னன் மிகுசத் துவத் தனொடு மொருநீலி நடுவ ணுறைத,லோர்பக லிருட்குநடு வானவனு மதுவல துதுவிரண் டற்ற விடமே,நானவிரு தானமென நாட்டியது தரிவேலி னண்ஞான சத்தி யதனை,நான்றரித் தவனெனச் சொலுமாறு மயில்கொடியின் ஞாலமுத னாத வரையும்,நடுவனா யவைகளாய் மேற்கொண்ட நன்னிலைய னானெனல் விளக்கி யதுவாங்,கானவிரு கூந்தலர்க் கொளலிச்சை கிரியனெனல் சாட்டவசு ரர்க்களைந்து,காத்தனமும் மலநீக்கி யுயிர்கட்கு வீடுதவல் காமமெனு மேம வறைமிக்,காணொளியின் னிலையென்னி லஃதினிலை யெவர் காண்பர் காட்டுவரிவ் வஞ்ச கத்தே