verse 19 · Madurai Meenakshi Pillaitamil · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 19 · செங்கீரைப் பருவம்
பரிமள மூறிய வுச்சியின் முச்சிபதிந்தா டச்சுடர்பொற்பட்டமு டன்சிறு சுட்டியும் வெயிலொடுபனிவெண் ணிலவாடத்திருநுதன் மீதெழு குறுவெயர் வாடத்தெய்வம ணங்கமழுந்திருமேனியின் முழு மரகத வொளியெண்டிக்கும் விரிந்தாடக்கருவினை நாறு குதம்பை ததும்பியகாது தழைந்தாடக்கதிர்வெண் முறுவ லரும்ப மலர்ந்திடுகமலத் திருமுகநின்அருள்விழி யொடும்வளர் கருணை பொழிந்திடவாடுக செங்கீரையவனி தழைந்திட மவுலி புனைந்தவளாடுக செங்கீரை.