verse 32 · Alagar Kalambakam · Aripatha Navalar
திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 32
சமயமென முதுகடவு கடவியுயிர் கறுவிவருசமனுமொரு திரண மிவனே,ஆமையுமென வுழலும்யம படருமொரு மசகமெழுதயனுமவ னளவு நமர்காள்,கமையுரக கிரியிறைவர் கரிகிரியில் வரதர்வளர்கமலைதன கிரியை யகலார்,இமையகிரி ரசதகிரிகனககிரி பரவுநமதிடபகிரி யழகர் துணையே.