verse 5063 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 118 of 234
கம்பராமாயணம் 5063 · ஊர் தேடு படலம்
ஓவியம் அனைய மாதர் ஊடினர், உணர்வோடு உள்ளம்மேவிய கரணம் முற்றும் கொழுநரோடு ஒழிய, யாணர்த்தூவி அம் பேடை என்ன, மின் இடை துவள ஏகி,ஆவியும் தாமுமே புக்கு, அரும் கதவு அடைக்கின்றாரை.