Verse 7094 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvaalanggaadu Thirutthaandagam · Verse 9 of 10

திருவாலங்காடு – திருத்தாண்டகம் · 6.78.9

காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே கயிலை மலையை யுடையார் தாமேஊரா வேகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமேபாரார் புகழப் படுவார் தாமே பழனை பதியா வுடையார் தாமேதீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
Share