Verse 7924 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruvegambam · Verse 6 of 11
திருவேகம்பம் · 7.61.6
திங்கள் தங்கிய சடையுடை யானைத் தேவ தேவனைச் செழுங்கடல் வளருஞ்சங்க வெண்குழைக் காதுடை யானைச் சாம வேதம் பெரிதுகப் பானைமங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்றகங்கை யாளனைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.