verse 1 · Thiruvarunai Kalambakam · Saiva Ellappa Navalar
திருவருணைக் கலம்பகம் 1
மணிகொண்ட நெடுங்கடலில் விழிவளரு மாதவனும்அணிகொண்ட புண்டரிக மகலாத சதுமுகனும்ஞானக்கண் ணதுகொண்டு நாடுமா றுணராதேஏனத்தின் வடிவாகி யெகினத்தின் வடிவாகிஅடிதேடி யறிவலென வவனியெலா முழுதிடந்தும்முடிதேடி வருவலென மூதண்ட மிசைப்பறந்தும்காணரிய வொருபொருளாய்க் களங்கமற விளங்குபெருஞ்சோணகிரி யெனநிறைந்த சுடரொளியாய் நின்றருள்வோய்.மலைமிசையி லிருப்பதற்கோ மலைசிலையா வெடுப்பதற்கோமலையரையன் மகிழ்வதற்கோ மலையுருவ மெடுத்தனையோஇத்தலத்தி லைந்தொழிலு மிருபிறப்போ ரறு தொழிலுந்தத்துவமுந் திருமேனி தரித்திலையே லியலாவே.இருக்காதி சதுர்வேத மிசைப்பதுநின் பலபேதமொருக்காலு மொன்றுரைத்த தொன்றுரைக்க வறியாகருமுடிவைத் தருகால கற்பமெலாங் கடக்கவுநின்றிருமுடியிற் பிறைசிறிதுந் தேயாது வளராதே.தானவரைக் கடிந்துமலர்ச் சதுமுகளை யொழித்துமற்றைவானவரை யழித்துநின்கை மழுப்படைவாய் மழுங்காதேஅண்டருக்கு முனிவருக்கு மழலான கொடுவிடத்தைக்கண்டமட்டு நுகர்ந்திடவுங் கண்டமட்டிற் கடவாதே.மூவாமை தனக்குநின்றன் முதனடுவீ றிலாதமைக்குஞ்சாவாமை பிறவாமை தமக்குமிவை சான்றன்றே.தடவரை நடைகெழு தரமென வருமொருகடகரி யுரிவிரி கலையென மருவினை.படமுடை யரவொடு பகைபடு முடுபதிதடையற வுடனுறை சடைநெடுமுடியினை.சிலையென மலையை வளைத்தனை.திரிபுர மெரிய நகைத்தனை.கலைமறை யிவுளி படைத்தனை.கதிரவ னெயிறு புடைத்தனை.விதி சிரத்தினை (1) நதி தரித்தனைஅகழ் கரத்தினை (2) மதி பரித்தனைவிடை நடத்தினை (3) நாள்க ளாயினைபொது நடத்தினை (4) கோள்க ளாயினை.பண்ணுநீ சுவையுநீ பரிதியுநீ பனிக்கதிர்நீபெண்ணுநீ யாணுநீ பேதமுநீ யபேதமுநீ.செங்காலிற் கருங்காலன் சிரமுருள வுதைத்தனையேசங்காழி முகுந்தனுக்குச் சங்காழி கொடுத்தனையே.ஆராலு மளவிடுதற் கரியவுனை யொருகரத்துநீராலு மலராலு நெஞ்சுருகப் பணலாமே.எனவாங்கு.வேற்று மருந்தால் விடாதவெம் பிறவியைமாற்று மருந்தா மலைமேன் மருந்தாஅழகிய நாயகி யருளுடை நாயகிபுழுகணி நாயகி பொருந்திய புனிதாகாசியி லிறந்துங் கமலையிற் பிறந்தும்தேசமர் தில்லையுட் டிருநடங் கண்டும்அரிதினிற் பெறும்பே றனைத்தையு மொருகால்கருதினர்க் களிக்குங் கருணையை விரும்பிஅடைக்கலம் புகுந்தன னடியேன்இடர்க்கடல் புகுதா தெடுத்தரு ளென்வே.