பூத நாயகர் புற்று இடம் கொண்டவர்ஆதி தேவர் அமர்ந்த பூங் கோயிலிற்சோதி மாமணி நீள் சுடர் முன்றில் சூழ்மூதெயில் திரு வாயில் முன்னாயது.
Open this verse
பாடல்கள் The verses
பூவார் திசை முகன் இந்திரன் பூ மிசைமா வாழ் அகலத்து மால் முதல் வானவர்ஓவாது எவரும் நிறைந்து உள்ளதுதேவா சிரியன் எனுந் திருக் காவணம்.
Open this verse
அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்நிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால்புரந்த அஞ்சு எழுத்து ஓசை பொலிதலால்பரந்த ஆயிரம் பாற் கடல் போல்வது.
Open this verse
அகில காரணர் தாள பணிவார்கள் தாம்அகில லோகமும் ஆளற்கு உரியர் என்றுஅகில லோகத்து உளார்கள் அடைதலின்அகில லோகமும் போல்வத தனிடை.
Open this verse
அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால்மெய்த் தழைந்து விதிர்ப்புறு சிந்தையார்கைத் திருத் தொண்டு செய்கடப் பாட்டினார்இத்திறத்தவர் அன்றியும் எண்ணிலார்.
Open this verse
மாசிலாத மணி திகழ் மேனி மேல்பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்தேசினால் எத் திசையும் விளங்கினார்பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார்.
Open this verse
பூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும்மாதோர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்கோதிலாத குணப் பெருங் குன்றனார்.
Open this verse
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்கூடும் அன்பினில் கும்பிடலே அன்றிவீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
Open this verse
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையேபாரம் ஈசன் பணி அலாது ஒன்று இலார்ஈர அன்பினர் யாதுங் குறைவு இலார்வீரம் என்னால் விளம்பும் தகையதோ?
Open this verse
வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்தாண்டவப் பெருமான் தனித் தொண்டர்கள்நீண்ட தொல் புகழார் தம் நிலைமையைஈண்டு வாழ்த்துகேன் என்னறிந்து ஏத்துகேன்.
Open this verse
இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்அந்தம் இல் புகழ் ஆலால சுந்தரன்சுந்தரத் திருத் தொண்டத் தொகைத் தமிழ்வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம்.
Open this verse