Verse 6902 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvenni Thirutthaandagam · Verse 2 of 10

திருவெண்ணி – திருத்தாண்டகம் · 6.59.2

நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும் நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லாரும் பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
Share