Verse 6905 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvenni Thirutthaandagam · Verse 5 of 10
திருவெண்ணி – திருத்தாண்டகம் · 6.59.5
மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்பண்ணிலங்கு பாடலோ டாட லாரும் பருப்பதமும் பாசூரும் மன்னி னாருங்கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக் கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.