Verse 6908 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvenni Thirutthaandagam · Verse 8 of 10

திருவெண்ணி – திருத்தாண்டகம் · 6.59.8

செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந் திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும் ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்வெஞ்சினத்த வேழமது வுரிசெய் தாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
Share