Verse 6907 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvenni Thirutthaandagam · Verse 7 of 10
திருவெண்ணி – திருத்தாண்டகம் · 6.59.7
மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி மடவா ளவளோடு மானொன் றேந்திச்சிட்டிலங்கு வேடத்தா ராகி நாளுஞ் சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த காலன்றன் கால மறுப்பார் தாமும்விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.