Verse 7059 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkudandhaikkeezhkkottam Thirutthaandagam · Verse 5 of 11

திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் – திருத்தாண்டகம் · 6.75.5

காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங் காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும் ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்நீலவுரு வயிரநிரைப் பச்சை செம்பொன் நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
Share