Verse 7097 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirutthalaiyaalanggaadu Thirutthaandagam · Verse 2 of 10
திருத்தலையாலங்காடு – திருத்தாண்டகம் · 6.79.2
அக்கிருந்த அரையானை அம்மான் றன்னை அவுணர்புர மொருநொடியி லெரிசெய் தானைக்கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் றன்னைக் குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தைபுக்கிருந்து போகாத புனிதன் றன்னைப் புண்ணியனை எண்ணருஞ்சீர்ப் போக மெல்லாந்தக்கிருந்த தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே.