Verse 7100 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirutthalaiyaalanggaadu Thirutthaandagam · Verse 5 of 10
திருத்தலையாலங்காடு – திருத்தாண்டகம் · 6.79.5
கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் றன்னைக் காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் றன்னைஅங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை ஐயாறு மேயானை ஆரூ ரானைப்பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் றன்னைப் பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்சங்கரனைத் தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே.