Verse 7104 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirutthalaiyaalanggaadu Thirutthaandagam · Verse 9 of 10
திருத்தலையாலங்காடு – திருத்தாண்டகம் · 6.79.9
பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப் படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான் றன்னைக் காரணனை நாரணனைக் கமலத் தோனைஎண்டளவி லென்னெஞ்சத் துள்ளே நின்ற எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்தண்டரனைத் தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே.