Verse 7103 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirutthalaiyaalanggaadu Thirutthaandagam · Verse 8 of 10
திருத்தலையாலங்காடு – திருத்தாண்டகம் · 6.79.8
கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக் கன்றாப்பின் நடுதறியைக் காறை யானைஇரும்பமர்ந்த மூவிலைவே லேந்தி னானை என்னானைத் தென்னானைக் காவான் றன்னைச்சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத் தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்தரும்பொருளைத் தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே.