verse 16 · Madurai Meenakshi Pillaitamil · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 16 · செங்கீரைப் பருவம்
பண்ணறா வரிமிடற் றறுகாண் மடுப்பப்பசுந்தேற லாற லைக்கும்பதுமபீ டிகையுமுது பழமறை விரிந்தொளிபழுத்தசெந் நாவு மிமையாக்கண்ணறா மரகதக் கற்றைக் கலாமஞ்ஞைகண்முகி றதும்ப வேங்குங்கார்வரையும் வெள்ளெனவொர் கன்னிமா டத்துவளர்கற்பூர வல்லி கதிர்கால்விண்ணறா மதிமுயற் கலைகிழிந் திழியமுதவெள்ளருவி பாய வெடிபோய்மீளுந் தகட்டகட் டிளவாளை மோதமுகைவிண்டொழுகு முண்ட கப்பூந்தெண்ணறா வருவிபாய் மதுரைமர கதவல்லிசெங்கீரை யாடி யருளேதென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்விசெங்கீரை யாடி யருளே.