verse 17 · Madurai Meenakshi Pillaitamil · Kumaraguruparar

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 17 · செங்கீரைப் பருவம்

முகமதி யூடெழு நகைநில வாடமுடிச்சூ ழியமாடமுரிபுரு வக்கொடி நுதலிடு சுட்டிமுரிப்பொ டசைந் தாடஇகல்விழி மகரமு மம்மக ரம்பொருமிருமக ரமுமாடவிடுநூ புரவடி பெயரக் கிண்கிணெனுங்கிண் கிணியாடத்துகிலொடு சோர்தரு கொடிநுண் மருங்குறுவண்டு துவண்டாடத்தொந்தி சரிந்திட வுந்தி கரந்தொளிர்சூலுடை யாலிடைமற்றகில சராசர நிகிலமொ டாடிடவாடுக செங்கீரையவனி தழைந்திட மவுலி புனைந்தவளாடுக செங்கீரை.
Share