verse 4966 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 21 of 234
மதில் வருணனை
கம்பராமாயணம் 4966 · ஊர் தேடு படலம்
முன்னம் யாவரும், 'இராவணன் முனியும் என்று எண்ணிப்பொன்னின் மாநகர் மீச்செலான் கதிர் 'எனப் புகல்வார்;கன்னி ஆரையின் ஒளியினில் கண்வழுக் குறுதல்உன்னி, நாள்தொறும் விலங்கினன் போதலை உணரார்!