Sundara Kandam · Kaatchi Padalam · Verse 120 of 159
தோற்றனை பறவைக்கு அன்று; துள்ளும் நீர் வெள்ளம் சென்னிஏற்றவன் வாளால் வென்றாய், இன்று எனின் இறத்தி அன்றே!நோற்ற நோன்பு, உடைய வாழ் நாள், வரம், இவை நுனித்த எல்லாம்,கூற்றினுக்கு அன்றே? வீரன் சரத்துக்கும் குறித்தது உண்டோ?