verse 7583 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 185 of 363
கம்பராமாயணம் 7583 · கும்பகருணன் வதைப் படலம்
‘பெயர்ந்து ஒரு சிகரம் தேடின்,அச்சம் ஆம் பிறர்க்கும் ‘என்னாப்புயங்களே படைகள் ஆகத்தேர் எதிர் ஓடிப் புக்கான்,இயங்களும் கடலும் மேகத்துஇடிகளும் ஒழிய, யாரும்பயம் கொளக் கரங்கள் ஓச்சிக்குத்தினான், உதைத்தான் பல்கால்.