Verse 2436 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunaaraiyoor · Verse 8 of 11
திருநாரையூர் · 2.86.8
உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம் நனியஞ்சு மாத லுறநீர்மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின் அழிபா டிலாத கடலின்அருவரை சூழிலங்கை அரையன்றன் வீரம் அழியத் தடக்கை முடிகள்திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.