Verse 2879 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruvaavadudhurai · Verse 11 of 11
திருவாவடுதுறை · 3.4.11
அலைபுனல் ஆவடு துறையமர்ந்த இலைநுனை வேற்படை யெம்மிறையை நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார் இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.