Verse 4966 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thanith Thirunerisai · Verse 2 of 10

தனித் – திருநேரிசை · 4.76.2

மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப்பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப் பாய்ச்சித்தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச்செம்மையுள் நிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே.
Share