Verse 6739 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruppoondhurutthi · Verse 3 of 10
திருப்பூந்துருத்தி · 6.43.3
எனக்கென்று மினியானை எம்மான் றன்னை எழிலாரு மேகம்பம் மேயான் றன்னைமனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான் றன்னைத்தனக்கென்றும் அடியேனை யாளாக் கொண்ட சங்கரனைச் சங்கவார் குழையான் றன்னைப்புனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் றன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.