Verse 6741 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruppoondhurutthi · Verse 5 of 10
திருப்பூந்துருத்தி · 6.43.5
மிக்கானை வெண்ணீறு சண்ணித் தானை விண்டார் புரமூன்றும் வேவ நோக்கிநக்கானை நான்மறைகள் பாடி னானை நல்லார்கள் பேணிப் பரவ நின்றதக்கானைத் தண்டா மரைமே லண்ணல் தலைகொண்டு மாத்திரைக்கண் உலக மெல்லாம்புக்கானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.