Verse 6788 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvalivalam · Verse 1 of 10

பண் · திருத்தாண்டகம்

திருவலிவலம் · 6.48.1

நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண் நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்தவில்லான்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண் மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண் தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈயவல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
Share