Verse 6791 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvalivalam · Verse 4 of 10
திருவலிவலம் · 6.48.4
உய்த்தவன்காண் உடல்தனக்கோர் உயிரா னான்காண் ஓங்காரத் தொருவன்காண் உலகுக் கெல்லாம்வித்தவன்காண் விண்பொழியும் மழையா னான்காண் விளைவவன்காண் விரும்பாதார் நெஞ்சத் தென்றும்பொய்த்தவன்காண் பொழிலேழுந் தாங்கி னான்காண் புனலோடு வளர்மதியும் பாம்புஞ் சென்னிவைத்தவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.