Verse 6795 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvalivalam · Verse 8 of 10
திருவலிவலம் · 6.48.8
முன்னவன்காண் பின்னவன்காண் மூவா மேனி முதலவன்காண் முடிவவன்காண் மூன்று சோதிஅன்னவன்காண் அடியார்க்கும் அண்டத் தார்க்கும் அணியவன்காண் சேயவன்காண் அளவில் சோதிமின்னவன்காண் உருமவன்காண் திருமால் பாகம் வேண்டினன்காண் ஈண்டுபுனற் கங்கைக் கென்றும்மன்னவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.