Verse 6797 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvalivalam · Verse 10 of 10
திருவலிவலம் · 6.48.10
பங்கயத்தின் மேலானும் பால னாகி உலகளந்த படியானும் பரவிக் காணாகங்கைவைத்த சென்னியராய் அளக்க மாட்டா அனலவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்கொங்கலர்த்த முடிநெரிய விரலா லூன்றுங் குழகன்காண் அழகன்காண் கோல மாயமங்கையர்க்கோர் கூறன்காண் வானோ ரேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.