Verse 6802 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkogaranam · Verse 5 of 10
திருக்கோகரணம் · 6.49.5
சென்றச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண் தீயம்பன் காண்திரிபு ரங்கள் மூன்றும்பொன்றப் பொடியாக நோக்கி னான்காண் பூதன்காண் பூதப் படையா ளிகாண்அன்றப் பொழுதே அருள்செய் தான்காண் அனலாடிகாண் அடியார்க் கமுதா னான்காண்மன்றல் மணங்கமழும் வார்சடை யான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.