Verse 6803 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkogaranam · Verse 6 of 10

திருக்கோகரணம் · 6.49.6

பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண் பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்கறையோடு மணிமிடற்றுக் காபா லிகாண் கட்டங்கன் காண்கையிற் கபால மேந்திப்பறையோடு பல்கீதம் பாடி னான்காண் ஆடினான் காண்பாணி யாக நின்றுமறையோடு மாகீதங் கேட்டான் றான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
Share