Verse 6798 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkogaranam · Verse 1 of 10

பண் · திருத்தாண்டகம்

திருக்கோகரணம் · 6.49.1

சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண் தாழ்சடையான் காண்சார்ந்தார்க் கமுதா னான்காண்அந்தரத்தில் அசுரர்புரம் மூன்றட் டான்காண் அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண் பலபலவும் பாணி பயில்கின் றான்காண்மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
Share