Verse 6805 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkogaranam · Verse 8 of 10
திருக்கோகரணம் · 6.49.8
பின்னுசடை மேற்பிறை சூடி னான்காண் பேரருளன் காண்பிறப்பொன் றில்லா தான்காண்முன்னி யுலகுக்கு முன்னா னான்காண் மூவெயிலுஞ் செற்றுகந்த முதல்வன் றான்காண்இன்னவுரு என்றறிவொ ணாதான் றான்காண் ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்மன்னும் மடந்தையோர் பாகத் தான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.