Verse 6810 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruveezhimizhalai · Verse 3 of 10

திருவீழிமிழலை · 6.50.3

அன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை அகத்தியனை யுகப்பானை அயன்மால் தேடநின்றானைக் கிடந்தகடல் நஞ்சுண் டானை நேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும்வென்றானை மீயச்சூர் மேவி னானை மெல்லியலாள் தவத்தினிறை யளக்க லுற்றுச்சென்றானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
Share