Verse 6812 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruveezhimizhalai · Verse 5 of 10

திருவீழிமிழலை · 6.50.5

நற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த நஞ்சமுது செய்தானை அமுத முண்டமற்றமரர் உலந்தாலும் உலவா தானை வருகாலஞ் செல்காலம் வந்த காலம்உற்றவத்தை யுணர்ந்தாரும் உணர லாகா ஒருசுடரை யிருவிசும்பி னூர்மூன் றொன்றச்செற்றவனைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
Share