Verse 6811 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruveezhimizhalai · Verse 4 of 10
திருவீழிமிழலை · 6.50.4
தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத் தோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்றதாயானைச் சக்கரமாற் கீந்தான் றன்னைச் சங்கரனைச் சந்தோக சாம மோதும்வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்சேயானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.