Verse 6814 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruveezhimizhalai · Verse 7 of 10

திருவீழிமிழலை · 6.50.7

மிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை வெவ்வேறாய் இருமூன்று சமய மாகிப்புக்கானை எப்பொருட்கும் பொது வானானைப் பொன்னுலகத் தவர்போற்றும் பொருளுக் கெல்லாந்தக்கானைத் தானன்றி வேறொன் றில்லாத் தத்துவனைத் தடவரையை நடுவு செய்ததிக்கானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
Share