Verse 6816 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruveezhimizhalai · Verse 9 of 10

திருவீழிமிழலை · 6.50.9

பரத்தானை இப்பக்கம் பலவா னானைப் பசுபதியைப் பத்தர்க்கு முத்தி காட்டும்வரத்தானை வணங்குவார் மனத்து ளானை மாருதமால் எரிமூன்றும் வாயம் பீர்க்காஞ்சரத்தானைச் சரத்தையுந்தன் றாட்கீழ் வைத்த தபோதனனைச் சடாமகுடத் தணிந்த பைங்கட்சிரத்தானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
Share