Verse 7086 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvaalanggaadu Thirutthaandagam · Verse 1 of 10
திருவாலங்காடு – திருத்தாண்டகம் · 6.78.1
ஒன்றா வுலகனைத்து மானார் தாமே ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமேநின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே நீர்வளிதீ யாகாச மானார் தாமேகொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே கோலப் பழனை யுடையார் தாமேசென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.