Verse 7087 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvaalanggaadu Thirutthaandagam · Verse 2 of 10

திருவாலங்காடு – திருத்தாண்டகம் · 6.78.2

மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே வானோர் வணங்கப் படுவார் தாமேசலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமேபலபலவும் வேடங்க ளானார் தாமே பழனை பதியா வுடையார் தாமேசிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
Share