Pathigam 118 / 136 · First Thirumurai · Thirugnanasambandar

Thirupparuppadham

திருப்பருப்பதம் · 11 verses · 1285–1295

Share

பாடல்கள் The verses

1 Verse 1285

பண் · வியாழக்குறிஞ்சி

சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான்இடுமணி யெழிலானை யேறலன் எருதேறிவிடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.

பொருள்

சுடர் மணியை உமிழும் நாகம் சூழ்தர அதை அரைக்குக் கட்டியவன்; மணி அணிந்த எழில் ஆனையை ஏறாதவன், எருதை ஏறி; விடம் அணிந்த மிடறுடையவன் மேவிய, நெடு கோட்டில் படு மணி விடு சுடர் ஆரும் பருப்பதம் பரவுதுமே.

Meaning

He bound the cobra that spits a glowing gem at his waist so that it wraps around; he does not ride the beautiful elephant with its bells, but rides the bull; he whose throat is adorned with poison dwells there. Let us praise Paruppatham, whose high peak is full of light given off by the great gems that lie there.

Open this verse
2 Verse 1286
நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில்நீபுல்கு தோற்றமெல்லாம் நினையுள்கு மடநெஞ்சேவாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப்பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே.

பொருள்

நோய் புல்கிய தோல் திரையாக, நரை வரும் நுகர் உடம்பில் நீ புல்கிய தோற்றம் எல்லாம் நினைந்து உள்கும் மட நெஞ்சே; வாய் புல்கு தோத்திரத்தால் வலம் செய்து தலை வணங்கிப் பாய் புலித் தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே.

Meaning

O foolish heart that remembers and holds within all the forms you have taken in this body — a curtain of skin to which disease clings, where grey hair comes and wrinkles — with praise held in the mouth, go round him and bow your head; let us praise Paruppatham of the one who wears the leaping tiger's skin.

Open this verse
3 Verse 1287
துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால்இனியுறு பயனாதல் இரண்டுற மனம்வையேல்கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும்பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே.

பொருள்

துனி உறு துயர் தீரத் தோன்றி, ஓர் நல் வினையால் இனி உறு பயன் ஆதல் — இரண்டு உற மனம் வையேல்; கனி உறு மரம் ஏறிக் கருமுசுக் கழையும் உகளும் பனி உறு கதிர் மதியான் பருப்பதம் பரவுதுமே.

Meaning

So that the grief of disgust may end and a sweet fruit may come from some good deed — do not set your mind on both at once. Let us praise Paruppatham of the one of the cool-rayed moon, where the black-faced monkeys climb the fruit trees and leap on the bamboos.

Open this verse
4 Verse 1288
கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்எங்கள்நோய் அகலநின்றா னெனவரு ளீசனிடம்ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்தபைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே.

பொருள்

கொங்கு அணிந்த நறும் கொன்றைத் தொங்கலன்; குளிர் சடையான்; எங்கள் நோய் அகல நின்றான் என அருளீசனிடம்; ஐங்கணையும் வரி சிலையும் உடைய அநங்கனை அழகு அழித்த பைம் கண் வெள் ஏறு உடையான் பருப்பதம் பரவுதுமே.

Meaning

He wears the fragrant kondrai full of honey hanging in a garland; his matted hair is cool; he stood so that our disease may leave — so the gracious lord is praised. Let us praise Paruppatham of the one with the white bull of tender eyes, who destroyed the beauty of Anangan with his five arrows and his striped bow.

Open this verse
5 Verse 1289
துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடிமறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச்சிறையொலி கிளிபயிலுந் தேனினம் ஒலியோவாபறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே.

பொருள்

துறை பலவும் சுனையும் மூழ்கித் தூ மலர் சுமந்து ஓடி, மறையொலி வாய் மொழியால் வானவர் மகிழ்ந்து ஏத்த, சிறை ஒலி கிளி பயிலும், தேன் இனம் ஒலி ஓவா, பறைபடு விளங்கு அருவிப் பருப்பதம் பரவுதுமே.

Meaning

Bathing at the many fords and in the pools, carrying pure flowers and running, while the gods rejoice and praise with the sound of the Vedas on their tongues; where the parrots practise their cage-notes and the bees' hum never stops — let us praise Paruppatham of the shining waterfall that sounds like a drum.

Open this verse
6 Verse 1290
சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில்ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல்கார்கெழு நறுங்கொன்றைக் கடவுள திடம்வகையால்பார்கெழு புகழோவா பருப்பதம் பரவுதுமே.

பொருள்

சீர் கெழு சிறப்பு ஓவாத செய்தவ நெறியை வேண்டில், ஏர் கெழு மட நெஞ்சே, இரண்டு உற மனம் வையேல்; கார் கெழு நறும் கொன்றைக் கடவுளது இடம் வகையால், பார் கெழு புகழ் ஓவா பருப்பதம் பரவுதுமே.

Meaning

If you wish for the path of austerity whose fame and eminence never cease, O young heart rich in beauty, do not set your mind on two things at once; by the manner of the place of the god of the fragrant kondrai heavy with rain-clouds — let us praise Paruppatham, whose fame fills the earth and never ends.

Open this verse
7 Verse 1291
புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத்தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேறவிடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான்படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே.

பொருள்

புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ, தொடை புல்கு நறு மாலை திருமுடி மிசை ஏற, விடை புல்கு கொடி ஏந்தி வெந்த வெண் நீறு அணிவான், படை புல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே.

Meaning

As the wide spreading lotus, with incense and fragrance, clings about, and the fragrant garland woven with it mounts upon his sacred crown; he who holds the banner bearing the bull, who wears the burnt white ash, the one of the battle-axe — let us praise Paruppatham.

Open this verse
8 Verse 1292
நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதேமனத்தினை வலித்தொழிந்தேன் அவலம்வந் தடையாமைக்கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்றன்பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே.

பொருள்

நினைப்பு எனும் நெடும் கிணற்றை நின்று நின்று அயராதே, அவலம் வந்து அடையாமைக்கு மனத்தினை வலித்து ஒழிந்தேன்; கனைத்து எழு திரள் கங்கையைக் கமழ் சடைக்கு உரித்தானின் பனைத் திரள் பாய் அருவிப் பருப்பதம் பரவுதுமே.

Meaning

Standing again and again at the deep well called thought without wearying, I have forced and left the mind, so that sorrow may not come near. Let us praise Paruppatham of the waterfall where the shoals leap, of the one who took the roaring swollen Ganga into his fragrant hair.

Open this verse
9 Verse 1293
மருவிய வல்வினைநோய் அவலம்வந் தடையாமல்திருவுரு அமர்ந்தானுந் திசைமுகம் உடையானும்இருவரும் அறியாமை எழுந்ததோ ரெரிநடுவேபருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.

பொருள்

மருவிய வல் வினை நோயும் அவலமும் வந்து அடையாமல், திருவுரு அமர்ந்தானும் திசைமுகம் உடையானும் இருவரும் அறியாமை எழுந்த ஒர் எரி நடுவே பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.

Meaning

So that the disease of clinging strong deeds and sorrow may not come near: in the midst of a fire that rose so that the two — the one on whom Tiru is seated and the one with faces in all directions — could not know him, he stood erect against the ancient mountain. Let us praise Paruppatham.

Open this verse
10 Verse 1294
சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின்படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

பொருள்

சடங்கு கொண்ட சாத்திரத்தாரும் சாக்கியரும் சமண்குண்டரும் மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி, ஓர் பேய்த் தேர்ப்பின் குடம் கொண்டு நீர்க்குச் செல்வார் — போதுமின்; குஞ்சரத்தின் படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

Meaning

The ritualists of the scriptures, the Buddhists and the conceited Jains, bewildered in their wish for folly, go with pots to fetch water from a mirage — enough of them. Let us praise Paruppatham of the one whose covering is the hide taken from the elephant.

Open this verse
11 Verse 1295
வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்பண்செலப் பலபாடல் இசைமுரல் பருப்பதத்தைநன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தன்நல்லஒண்சொலின் இவைமாலை யுருவெணத் தவமாமே.

பொருள்

வெண் செநெல் விளையும் கழனியும் விழவொலியும் உடைய கழுமலத்தான்; பண் செலப் பல பாடல் இசை முரலும் பருப்பதத்தை நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன் நல்ல ஒண் சொலின் இவை மாலை, உரு எணத் தவம் ஆமே.

Meaning

The one of Kalumalam, whose fields ripen white and red paddy and where the sound of festivals rises; Paruppatham, where many songs resound as the melody moves. This garland of his good and bright words, by Sambandar who praises with good words — recited and counted, it becomes austerity.

Open this verse