பதிகம் 118 / 136 · முதல் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருப்பருப்பதம்

Thirupparuppadham · 11 பாடல்கள் · 1285–1295

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 1285

பண் · வியாழக்குறிஞ்சி

சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான்இடுமணி யெழிலானை யேறலன் எருதேறிவிடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 1286
நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில்நீபுல்கு தோற்றமெல்லாம் நினையுள்கு மடநெஞ்சேவாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப்பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 1287
துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால்இனியுறு பயனாதல் இரண்டுற மனம்வையேல்கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும்பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 1288
கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்எங்கள்நோய் அகலநின்றா னெனவரு ளீசனிடம்ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்தபைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 1289
துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடிமறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச்சிறையொலி கிளிபயிலுந் தேனினம் ஒலியோவாபறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 1290
சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில்ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல்கார்கெழு நறுங்கொன்றைக் கடவுள திடம்வகையால்பார்கெழு புகழோவா பருப்பதம் பரவுதுமே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 1291
புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத்தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேறவிடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான்படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 1292
நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதேமனத்தினை வலித்தொழிந்தேன் அவலம்வந் தடையாமைக்கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்றன்பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 1293
மருவிய வல்வினைநோய் அவலம்வந் தடையாமல்திருவுரு அமர்ந்தானுந் திசைமுகம் உடையானும்இருவரும் அறியாமை எழுந்ததோ ரெரிநடுவேபருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 1294
சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின்படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 1295
வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்பண்செலப் பலபாடல் இசைமுரல் பருப்பதத்தைநன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தன்நல்லஒண்சொலின் இவைமாலை யுருவெணத் தவமாமே.
பாடலின் தனிப் பக்கம்