பண் · பழந்தக்கராகம்
ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்யசொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றிநல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்தவல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.
பொருள்
ஒல்லையாறி உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்து வெய்ய சொல்லை ஆறித் தூய்மை செய்து காமவினை அகற்றி, நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்று ஏத்த வல்லவாறே வந்து நல்காய், வலிவலம் மேயவனே.
Meaning
Come and grant that I may be able to praise your name as it comes on my tongue, in the good way — my mind gathered and made fit, deceit gone, the harsh word cooled, purity made, the deed of desire put away — O one who dwells at Valivalam.