பதிகம் 60 / 136 · முதல் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருத்தோணிபுரம்

Thirutthoniburam · 11 பாடல்கள் · 650–660

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 650

பண் · பழந்தக்கராகம்

வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத்துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே.

பொருள்

வண்டு அரங்கப் புனல் கமலம் அது மாந்திப் பெடையினொடும் ஒண்டு அரங்க இசை பாடும் அளி அரசே, ஒளி மதியத் துண்டு அரங்கப் பூண்மார்பர் திருத்தோணிபுரத்து உறையும் பண்டு அரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒருகால் பகராயே.

Meaning

O king bee, who drink the lotus of the water in the temple tank and sing with your mate in one voice — tell my state, once, to the ancient dweller of Thiruthonipuram, whose breast wears the ornament of the shining moon.

பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 651
எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலைஅறிவுறா தொழிவதுவும் அருவினையேன் பயனன்றேசெறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.

பொருள்

எறி சுறவம் கழிக்கானல் இளங்குருகே, என் பயலை அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே; செறி சிறார் பதம் ஓதும் திருத்தோணிபுரத்து உறையும் வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.

Meaning

O young kuruku bird of the shore where the leaping sharks are, that my girl should pass on without knowledge coming to her is not the fruit of my helpless deeds; tell the brahmin of the fragrant flower garland, who recites the feet of those who come near and dwell at Thiruthonipuram.

பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 652
பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக்கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலைசெண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும்பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே.

பொருள்

பண்பு அழனக் கோட்டகத்து வாட்டம் இலாச் செஞ்சூட்டுக் கண் பகத்தின் வாரணமே, கடுவினையேன் உறு பயலை செண்பகம் சேர் பொழில் புடைசூழ் திருத்தோணிபுரத்து உறையும் பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழியாமோ, மொழியாயே.

Meaning

O elephant of the fair-eyed kind in the grove of good fields where the red crest never fades, if you tell my matter to the good one who dwells at Thiruthonipuram ringed by groves of screw-pine, will it be a fault? Speak.

பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 653
காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற்பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர்சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும்ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே.

பொருள்

காண் தகைய செங்கால் ஒண்கழி நாராய், காதலால் பூண்ட கைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று வளர் சேண் தகைய மணிமாடத் திருத்தோணிபுரத்து உறையும் ஆண்டகையாற் கின்று ஏசென்று அடி அறிய உணர்த்தாயே.

Meaning

O red-legged heron of the bright lagoon that is good to see, tell him so that he may know my state — that she who was joined in love has grown thin at the breast and brought forth gold — him who dwells at Thiruthonipuram of jewelled halls that rise high.

பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 654
பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்தகாராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே.

பொருள்

பாராரே எனை ஒருகால் தொழுகின்றேன், பாங்கு அமைந்த காரார் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள், தேர் ஆரும் நெடுவீதித் திருத்தோணிபுரத்து உறையும் நீரார் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே.

Meaning

People of the world, I bow to you once; O pigeons of the coral feet and the dark rich colour joined in company, tell my state to the one of the watery mat who dwells at Thiruthonipuram of long streets full of chariots.

பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 655
சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீசவீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள்தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காதகூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே.

பொருள்

சேற்று எழுந்த மலர்க் கமலச் செஞ்சாலிக் கதிர் வீச வீற்றிருந்த அன்னங்காள், விண்ணோடு மண் மறைகள் தோற்றுவித்த திருத்தோணிபுரத்து ஈசன் துளங்காத கூற்று உதைத்த திருவடியே கூடுமா, கூறீரே.

Meaning

O swans seated while the rays of the red rice in the lotus that rose from the mud spread out, will the sacred foot that kicked the unshaken Kala be reached — the foot of the lord of Thiruthonipuram, who brought forth the sky, the earth and the Vedas? Say.

பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 656
முன்றில்வாய் மடல்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறைஅன்றில்காள் பிரிவுறும்நோய் அறியாதீர் மிகவல்லீர்தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங்கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே.

பொருள்

முன்றில்வாய் மடல் பெண்ணைக் குரம்பைவாழ் முயங்கு சிறை அன்றில்காள், பிரிவு உறும் நோய் அறியாதீர், மிக வல்லீர்; தென்றலார் புகுந்து உலவும் திருத்தோணிபுரத்து உறையும் கொன்றைவார் சடையார்க்கு என் கூர்பயலை கூறீரே.

Meaning

O anril birds of the coupling wing that live in the huts where the palm leaf flaps at the doorstep, you do not know the sickness of parting — you are very able; tell my sharp girl to the one of the golden-shower mat who dwells at Thiruthonipuram, where the southern breeze enters and wanders.

பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 657
பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதிஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலேதேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்கோனாரை என்னிடத்தே வரவொருகாற் கூவாயே.

பொருள்

பான் ஆறும் மலர்ச் சூதப் பல்லவங்கள் அவை கோதி ஏனோர்க்கும் இனிதாக மொழியும் எழில் இளங்குயிலே, தேன் ஆரும் பொழில் புடைசூழ் திருத்தோணிபுரத்து அமரர் கோனாரை என்னிடத்தே வர ஒருகால் கூவாயே.

Meaning

O beautiful young cuckoo, who peck at the buds of the flower of the sweet-scented tree and speak sweetly to all, call the lord of the gods of Thiruthonipuram ringed by groves full of honey so that he comes to me once.

பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 658
நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன்சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும்விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே.

பொருள்

நல் பதங்கள் மிக அறிவாய், நான் உன்னை வேண்டுகின்றேன், பொற்பு அமைந்த வாயலகின் பூவை நல்லாய், போற்றுகின்றேன்; சொல்பதம் சேர் மறையாளர் திருத்தோணிபுரத்து உறையும் விற்பொலிதோள் விகிர்தனுக்கு என் மெய்ப்பயலை விளம்பாயே.

Meaning

You know good words well, and I ask you, O fair parrot of the golden cage, I praise you; tell my true girl to the wondrous one of shining shoulders who dwells at Thiruthonipuram, where the brahmins of the word live.

பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 659
சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.

பொருள்

சிறை ஆரும் மடக்கிளியே, இங்கே வா, தேனொடு பால் முறையாலே உணத் தருவேன்; மொய் பவளத் தொடு தரளம் துறை ஆரும் கடற்றோணிபுரத்து ஈசன் துளங்கும் இளம்பிறையாளன் திருநாமம் எனக்கு ஒருகால் பேசாயே.

Meaning

O young parrot full of cage, come here; I will give you honey and milk to eat in due order; speak to me once the sacred name of the lord of Kadarthonipuram, where the coral and the pearls of the banks fill the waters, the lord who wears the wavering young crescent.

பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 660
போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங்கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத்தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்தசீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.

பொருள்

போர் மிகுத்த வயற்றோணிபுரத்து உறையும் புரிசடை எம் கார் மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண் கமலத் தார் மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரை செய்த சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே.

Meaning

Those able in the famous Tamil that Sambandar of the mountain-like breast adorned with the rich lotus garland spoke of our lord of the twisted mat and the throat stained with the dark, who dwells at Vayarthonipuram of great war — they will reach the world of Shiva.

பாடலின் தனிப் பக்கம்