பதிகம் 131 / 136 · முதல் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருமுதுகுன்றம்

Thirumudhugundram · 11 பாடல்கள் · 1427–1437

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 1427

பண் · மேகராகக்குறிஞ்சி

மெய்த்தாறு சுவையும் ஏழிசையும் எண்குணங்களும் விரும்பும்நால்வேதத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப் பளிங்கேபோல் அரிவைபாகம்ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன் கருதுமூர் உலவுதெண்ணீர்முத்தாறு வெதிருதிர நித்திலம்வா ரிக்கொழிக்கும் முதுகுன்றமே.

பொருள்

மெய்யின் ஆறு சுவையும் ஏழ் இசையும் எண் குணங்களும் விரும்பும் நால் வேதத்தாலும் அறிவு ஒண்ணாத நடை, பளிங்கே போல் அரிவை பாகம் ஒத்து, ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர்; உலவு தெண்ணீர் முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முதுகுன்றமே.

Meaning

The town the one leader of the six sects desires — his manner like clear crystal, joined with the half of the woman, a manner no knowledge can reach through the four Vedas that long for the six tastes of the body, the seven notes and the eight qualities. That is Mutukuntram, where the clear moving Muttaru sweeps up and showers the pearls that the bamboos shed.

பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 1428
வேரிமிகு குழலியொடு வேடுவனாய் வெங்கானில் விசயன்மேவுபோரின்மிகு பொறையளந்து பாசுபதம் புரிந்தளித்த புராணர்கோயில்காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல மலருதிர்த்துக் கயமுயங்கிமூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றிற் புகுந்துலவு முதுகுன்றமே.

பொருள்

வேரி மிகு குழலியொடு வேடுவன் ஆய், வெங்கானில் விசயன் மேவு போரில் மிகு பொறை அளந்து, பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில்; காரின் மலி கடிப் பொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்துக் கயம் முயங்கி, மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவும் முதுகுன்றமே.

Meaning

The temple of the primeval one who, as a hunter with the woman of honey-rich tresses, in the fierce forest measured the great patience that Vijayan showed in the fight and granted him the Pasupata. That is Mutukuntram, where the sharp-scented groves rich with rain shed many fruits and flowers and embrace the tanks, and the strong southern breeze of swelling plenty enters the sacred courtyard and moves there.

பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 1429
தக்கனது பெருவேள்வி சந்திரனிந் திரனெச்சன் அருக்கன்அங்கிமிக்கவிதா தாவினொடும் விதிவழியே தண்டித்த விமலர்கோயில்கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு குயர்தெங்கின் குவைகொள்சோலைமுக்கனியின் சாறொழுகிச் சேறுலரா நீள்வயல்சூழ் முதுகுன்றமே.

பொருள்

தக்கனது பெருவேள்வியில் சந்திரனும் இந்திரனும் எச்சனும் அருக்கனும் அங்கியும், மிக்க விதாதாவினொடும் விதி வழியே தண்டித்த விமலர் கோயில்; கொக்கு இனிய கொழு வருக்கைக் கதலியும் கமுகும் உயர் தெங்கின் குவைகொள் சோலையில் முக்கனியின் சாறு ஒழுகிச் சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே.

Meaning

The temple of the spotless one who punished by law, at Dakshan's great sacrifice, the moon, Indra, Yama, the sun and Agni together with the great Vidhata. Mutukuntram, ringed by long fields where the mire never dries because the juice of mango, jack and banana runs down, and the groves are thick with jack pleasant to cranes, plantain, areca and tall coconut in clusters.

பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 1430
வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய விறலழிந்து விண்ணுளோர்கள்செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத் தேவர்களே தேரதாகமைம்மருவு மேருவிலு மாசுணநாண் அரியெரிகால் வாளியாகமும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த முதல்வனிடம் முதுகுன்றமே.

பொருள்

வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய, விறல் அழிந்து விண்ணுளோர்களும் செம்மலரோனும் இந்திரனும் மாலும் சென்று இரப்ப, தேவர்களே தேராக, மை மருவு மேருவிலும், மாசுணம் நாண், அரி எரி கால் வாளியாக, மும்மதிலும் நொடி அளவில் பொடி செய்த முதல்வன் இடம் முதுகுன்றமே.

Meaning

Mutukuntram is the place of the first one who in the space of an instant made the three forts into dust — when the fierce dwellers of the cities did outrage, and the deathless, their strength gone, and the red-lotus one and Indra and Mal went and begged, with the gods themselves for a chariot, Mount Meru where the dark clouds gather for a bow, the serpent for a string, and Vishnu with fire and wind for an arrow.

பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 1431
இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள் ஒருபாலா யொருபாலெள்காதுழைமேவும் உரியுடுத்த ஒருவனிருப் பிடமென்பர் உம்பரோங்குகழைமேவு மடமந்தி மழைகண்டு மகவினொடும் புகவொண்கல்லின்முழைமேவு மால்யானை இரைதேரும் வளர்சாரல் முதுகுன்றமே.

பொருள்

இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒரு பால் ஆய், ஒரு பால் எள்காது உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பிடம் என்பர்; உம்பர் ஓங்கு கழையில் மேவு மடமந்தி மழை கண்டு மகவினொடும் புக, ஒண் கல்லின் முழை மேவும் மால் யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே.

Meaning

They say Mutukuntram is the dwelling of the one who wears a hide — on one side the lady of fine ornaments, her waist bound in woven cloth, and on the other side the hide drawn on without any shame. It is the rising slope where the young female monkey that sits on the bamboo growing high to the sky, seeing rain, enters with her young, and the great elephant that lives in the cave of bright boulders goes seeking its food.

பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 1432
நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த நாதனிடம் நன்முத்தாறுவகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு கரையருகு மறியமோதிதகையாரும் வரம்பிடறிச் சாலிகழு நீர்குவளை சாயப்பாய்ந்துமுகையார்செந் தாமரைகள் முகம்மலர வயல்தழுவு முதுகுன்றமே.

பொருள்

நகை ஆர் வெண் தலை மாலையை முடிக்கு அணிந்த நாதன் இடம்; நல் முத்தாறு வகை ஆரும் வரைப் பண்டம் கொண்டு, இரண்டு கரை அருகும் மறிந்து மோதி, தகை ஆரும் வரம்பு இடறி, சாலியும் கழுநீரும் குவளையும் சாயப் பாய்ந்து, முகை ஆர் செந்தாமரைகள் முகம் மலர, வயலைத் தழுவும் முதுகுன்றமே.

Meaning

Mutukuntram is the place of the master who wears on his crown a garland of white skulls that seem to laugh. It is where the good Muttaru, carrying the mountain's produce of many kinds, strikes both banks and turns back from them, stumbles against the ridges that hold the fields, and flows on bending the paddy, the purple lily and the blue kuvalai, so that the red lotuses of full bud open their faces, and it embraces the fields.

பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 1433
அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ் இருந்தருளி யமரர்வேண்டநிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின் ஒன்றறுத்த நிமலர்கோயில்திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங் கெழிற்குறவர் சிறுமிமார்கள்முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி முத்துலைப்பெய் முதுகுன்றமே.

பொருள்

அறம் கிளரும் நால் வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி, அமரர் வேண்ட, நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில்; திறம் கொள் மணித் தரளங்கள் வரத் திரண்டு அங்கு எழிற் குறவர் சிறுமிமார்கள் முறங்களினால் கொழித்து, மணி செல விலக்கி, முத்து உலையில் பெய் முதுகுன்றமே.

Meaning

The temple of the spotless one who sat under the banyan of the four Vedas that speak of right conduct and taught there when the deathless begged him, and who cut off one of the five heads of the one of the red lotus shining with colour. Mutukuntram, where the lovely young girls of the Kuravar gather as the gems and pearls of many kinds come down, sift them with the winnow, sort out the stones, and pour the pearls into the cooking pot.

பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 1434
கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல் இலங்கையர்கோன் கண்ணும்வாயும்பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை மலையைநிலை பெயர்த்தஞான்றுமதிலளகைக் கிறைமுரல மலரடியொன் றூன்றிமறை பாடவாங்கேமுதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான் வாய்ந்தபதி முதுகுன்றமே.

பொருள்

கதிர் ஒளிய நெடு முடி பத்து உடைய கடல் இலங்கையர்கோன் கண்ணும் வாயும் பிதிர் ஒளிய கனல் பிறங்க, பெருங்கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று, மதில் அளகைக்கு இறை முரல, மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட, ஆங்கே முதிர் ஒளிய சுடர் நெடு வாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே.

Meaning

Mutukuntram is the fitting place of the one who long ago gave the long sword of mature brilliance — on that day when the king of Lanka in the sea, who has ten tall crowns giving light, moved great Mount Kailai from its place while fire of scattered light played in his eyes and mouth, when the lord of Alakai behind its walls cried out, one flower-like foot was pressed down and the Veda was sung, and there and then it was given.

பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 1435
பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும் பூந்துழாய் புனைந்தமாலும்ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந் துறநாடி யுண்மைகாணாத்தேவாருந் திருவுருவன் சேருமலை செழுநிலத்தை மூடவந்தமூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ மேலுயர்ந்த முதுகுன்றமே.

பொருள்

பூ ஆர் பொன் தவிசின் மிசை இருந்தவனும், பூந்துழாய் புனைந்த மாலும், ஓவாது கழுகும் ஏனமும் ஆய், உயர்ந்து ஆழ்ந்து உற நாடி உண்மை காணாத, தே ஆர்ந்த திருவுருவன் சேருமலை; செழு நிலத்தை மூட வந்த மூவாத முழங்கு ஒலி நீர் கீழ்த் தாழ, மேல் உயர்ந்த முதுகுன்றமே.

Meaning

The mountain the holy one of divine body reaches — he whose truth was not found by the two who sought him without cease: the one seated on the golden seat of flowers, and Mal adorned with fresh tulasi, who took the forms of eagle and boar, rising and diving to search him through and through. Mutukuntram, which rose high while the ancient roaring water that came to cover the fertile earth stayed low.

பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 1436
மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட் டுடையாரும் விரவலாகாஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும் உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்றுமோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து தவம்புரியும் முதுகுன்றமே.

பொருள்

மேனியில் சீவரத்தாரும் விரி தரு தட்டு உடையாரும் விரவலாகா ஊனிகள் ஆய் உள்ளார் சொல் கொள்ளாது, உள் உணர்ந்து அங்கு உய்ம்மின், தொண்டீர்; ஞானிகளாய் உள்ளார் நால் மறையை முழுது உணர்ந்து, ஐம் புலன்கள் செற்று, மோனிகளாய் முனிச் செல்வர் தனித்திருந்து தவம் புரியும் முதுகுன்றமே.

Meaning

Devotees, do not take in the words of those who are unfit for company — the ones with the ochre robe on their bodies and the ones with the broad mat — but know him within and save yourselves there. Mutukuntram, where those who are wise, having understood the four Vedas fully and conquered the five senses, live as the silent ones and perform penance alone.

பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 1437
முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும் முதுகுன்றத் திறையைமூவாப்பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய கழுமலமே பதியாக்கொண்டுதழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான சம்பந்தன் சமைத்தபாடல்வழங்குமிசை கூடும்வகை பாடுமவர் நீடுலகம் ஆள்வர்தாமே.

பொருள்

முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம் செய்யும் முதுகுன்றத்து இறையை, மூவாப் பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்த கழுமலமே பதியாகக் கொண்டு, தழங்கு எரி மூன்று ஓம்பு தொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல், வழங்கும் இசை கூடும் வகை பாடும் அவர் நீடு உலகம் ஆள்வர் தாமே.

Meaning

Those who sing these songs that Gnanasambandan made — he whose work is tending the three roaring fires, and who is skilled in Tamil — so that the music carries and joins, on the lord of Mutukuntram which the roaring Muttaru goes round from left to right, having taken as his own town Kazhumalam, which holds twelve ancient names that never age — they will rule the wide world.

பாடலின் தனிப் பக்கம்